Friday, March 30, 2012

niyamam pidaari amman temple
முத்தரையர் அரசர்களில் சக்கரவர்த்தியாக திகழ்ந்த பெரும்பிடுகு முத்தரையன் சுவரன் மாறன் இவர்  பல்லவ மன்னர்களுள் முதலாம் நரசிம்ம வர்மன் சோழ மன்னர்களுள் முதலாம் முதலாம் ராசராசனக்கும் பாண்டியர்களுள் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கும் ஒப்பானவன் இவன்தான் நியமத்தில் பிடாரி கோயிலை நிறுவினான் இது செந்தலை சுந்தரேஸ்வரர் கோயில் முன் மண்டபத்தில் காணப்பெறும் .செந்தலை கல்வெட்டுகளில் "சுவரன் மாறன்னானவன் எடுபித்த பிடாரிகோயில் அவநெரிந்த ஊர்களும் அவன் பேர்களும் அவனை பாடினர் பேர்களும் இத்தூண்கள் மேலுழுதின இவை "என அக்கல்வெட்டு கூற்கின்றது      

Thursday, March 29, 2012

முத்தரைய இனத்தின் நான்காவது மன்னன் பெரும்பிடுகு முத்தரையன் -1எனப்படும் குவாவன்மாறன் நார்த்தாமலையில் விசயலாய சோழிசுவரம் என்று வழங்கும் சிவன் கோயிலை எடுபித்துள்ளான் .இச்செய்தி இக்கோயிலில் காணப்பெறும் துவாரபாலகச் சிற்பத்தின் பீடத்தில் எழுதபெற்றுள்ளது
.அக்கல்வெட்டின் சரியான வாசகம் ,


"சாத்தன் பூதியான இலங்கோவதியரையரை எடுப்பித்த
கற்றளி மழை இடித்தழிய மல்லன் வந்துமன் ஆயின
தேனவன் தமிழ் அதியரையன் புதுக்கு "


  
அறிமுகம் ;- பழந்தமிழ்  குடியினரான முத்தரையரது வரையா வன்மை ,"பெருமுத்தரையர்  பெரிது வந்தீயும் கருணைச் சோறு ,என்று பதினெண் கீழ் கணக்கு நூல்களுள் ஒன்றாகிய நாலடியாரில் பெரிதும் புகழப்பட்டுள்ளது .








  

Saturday, January 28, 2012

saaaththan maaran-11

சாத்தனை அடுத்து அவனது மகன் சாத்தன் மாறன் என்பான் அரியணை ஏறினான் .இவனக்கு விடேல் விடுகு விழுபேரதிரையன் என்ற விருது பெயரும் உண்டு .கல்வெட்டு அறிஞர் கே.ஜி .கிருஷ்ணன் அவர்கள் இவ்வேந்தன் கி.பி .8  ஆம்   நூற்றாண்டின் இடையில் இரண்டாம் ராசசிம்ம பல்லவன் காலத்தில் வாழ்ந்தவன் ,இவ்வேந்தனை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு திருமையத்தில் உள்ள மெய் பெருமாள் கோயிலில் காணப்பெறுகிறது .
111 -மாறன் குவாவன்
-------------------------------
சாத்தன் மாறனை அடுத்து அவனது மகன்  மாறன் குவாவன் மணி முடி சூடி கொண்டான் .இவ்வேந்தனை பற்றி பொன்விளைந்தான் பட்டி இரண்டாம் நந்தி வர்மன் கல்வெட்டு ஒன்று  
  "ஸ்வஸ்தி ஸ்ரீ நந்திபன் மற்குயாண்டு 
............டுகு முத்தரையன் குவாவன் மனவாட்டிய்"
என்று குறிபிடுகிறது .
இவனது மனைவி சமண பள்ளிக்கு பொற்காசுகளை கொடையாக அளித்திருக்கிறாள் என்பது கல்வெட்டின் மூலம் தெரிகிறது  ,இம்மன்னனின் மகன் குவானின் மாறன் பற்றிய கல்வெட்டுகள் தஞ்சை மாவட்ட செந்தலையிலும்,மற்றொரு மகனாகிய குவாவன் சாத்தனின் கல்வெட்டு மலையடிபட்டியிலும் கிடைத்திருப்பதால் இவ்விரு பட்குதியிலும் ஒரு பெரும்பகுதி இம்மன்னன் ஆண்டிருக்கிறான் .    
    

Thursday, January 26, 2012

later mutharaiyar's.

பிற்கால முத்தரையர்கள் ;- தொண்டை மண்டலத்தை ஆண்ட முத்தரையரை 
----------------------------------   காட்டிலும் ,தஞ்சையை பகுதியை ஆண்ட பிற்கால முத்தரையர் தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளனர் .பிற்கால முத்தரையர் பற்றி தெரிந்து கொள்ள சான்றுகள் கிடைத்துள்ளதால் அவர்களது ஆட்சி பற்றியும் போர் நடவடிக்கைகள் பற்றியும் கலை இலக்கிய தொண்டு பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது .  
           முத்தரையர்கள் கி .பி எட்டாம் நூற்றாண்டின் இடையில்   இருந்து  கி .பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரையில் உள்ள ஒண்ணரை நூற்றாண்டுகள் முத்தரையர்கள் ஆட்சி செய்துள்ளனர் .
                            விடேல் விடுகு விழுப்பேரதி அரைசன் என்ற சாத்தன் மாறன் இம்மரபின் முதல் தலைவனாக தோன்றுகிறது இவனுடைய தாயின் பெயர் பெரும்பிடுகு பெருந்தேவி என்பாதாகும் சாத்தன் மாறன் என்ற பெயரின் முதற் பகுதி இவனுடைய தந்தை சாத்தன் என்ற பெயரை குறிக்கின்றதாக கொள்ளலாம் . 
                                   செந்தலை தூண் கல்வெட்டில் இம்மரபின் மூன்று அரசர்களின் பெயர்கள் காணபடுகின்றன .இவற்றுள் முதலாமவனாக பெரும்பிடுகு முத்த்ரையனான குவாவன் மாறன் குறிக்கபெருகின்றான்.குவாவன் என்பது இவனுடைய பாட்டன் பெயராகவும் கொள்ளலாம் .மாறன் பரமேஸ்வரன் அவனுடைய மகன் சுவரன் மாறனும் ஐந்தாவது ஆறாவது தலைமுறையை சேர்ந்தவர்களாக கொள்ளலாம் .
                              எழுத்தமைதியை கொண்டு கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பொரிக்கபெற்றதாக கருதப்படும் கல்வெட்டு ஒன்றை கொண்டு சாத்தன் என்பான் சுயேட்சையாக 
ஆட்சி புரிந்தவனாக கருதலாம் .(சான்று -பல்லவமன்னன் நந்தி வர்மன் மற்றும் நிருபதுங்க   வர்மனுடைய ஆட்சி கால கல்வெட்டுக்கள் ).   

Wednesday, January 11, 2012

சாத்தன் -
பிற்கால முத்தரைய மன்னருள் சாத்தன் என்பானே முதல் அரசன் என்று கருத பெறுகிறான் .பெரும்பிடுகு பெருந்தேவி  என்பார் இவனது தேவியார் ஆவார் .பெரும்பிடுகு என்னும் பல்லவ மன்னவர்களுடைய விருதிலிருந்து இவள் பல்லவ குல இளவரசி என்று கருதலாம் .முது வணிகத்தில் தனிப்புகழ் பெற்று விளங்கியமையால் இவ்வரசன் சாத்தன் என்று அழைக்கப்பெற்று இருக்ககூடம் .புதுகோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் விட்டுணு  குகை கோயில் பெரும்பிடுகு பெருந்தேவியின் காலத்தில் அமைக்கப்பட்டது .முத்தரையரது கோயில்களுள் இதுவே பழைமை மிக்கதாகும் .