Saturday, January 28, 2012

saaaththan maaran-11

சாத்தனை அடுத்து அவனது மகன் சாத்தன் மாறன் என்பான் அரியணை ஏறினான் .இவனக்கு விடேல் விடுகு விழுபேரதிரையன் என்ற விருது பெயரும் உண்டு .கல்வெட்டு அறிஞர் கே.ஜி .கிருஷ்ணன் அவர்கள் இவ்வேந்தன் கி.பி .8  ஆம்   நூற்றாண்டின் இடையில் இரண்டாம் ராசசிம்ம பல்லவன் காலத்தில் வாழ்ந்தவன் ,இவ்வேந்தனை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு திருமையத்தில் உள்ள மெய் பெருமாள் கோயிலில் காணப்பெறுகிறது .
111 -மாறன் குவாவன்
-------------------------------
சாத்தன் மாறனை அடுத்து அவனது மகன்  மாறன் குவாவன் மணி முடி சூடி கொண்டான் .இவ்வேந்தனை பற்றி பொன்விளைந்தான் பட்டி இரண்டாம் நந்தி வர்மன் கல்வெட்டு ஒன்று  
  "ஸ்வஸ்தி ஸ்ரீ நந்திபன் மற்குயாண்டு 
............டுகு முத்தரையன் குவாவன் மனவாட்டிய்"
என்று குறிபிடுகிறது .
இவனது மனைவி சமண பள்ளிக்கு பொற்காசுகளை கொடையாக அளித்திருக்கிறாள் என்பது கல்வெட்டின் மூலம் தெரிகிறது  ,இம்மன்னனின் மகன் குவானின் மாறன் பற்றிய கல்வெட்டுகள் தஞ்சை மாவட்ட செந்தலையிலும்,மற்றொரு மகனாகிய குவாவன் சாத்தனின் கல்வெட்டு மலையடிபட்டியிலும் கிடைத்திருப்பதால் இவ்விரு பட்குதியிலும் ஒரு பெரும்பகுதி இம்மன்னன் ஆண்டிருக்கிறான் .    
    

No comments:

Post a Comment