Friday, April 6, 2012

மாறன் குவாவனை அடுத்து குவாவன்மாறன் ஆட்ச்சிக்கு வந்தான் .பெரும்பிடுகு முத்தரையன் என்னும்  பட்டப்பெய்ரினை பூண்டிருந்தான் .இவன் இரண்டாம் நந்திவர்மப் பல்லவனக்கும் முதலாம் ராசா சிம்ம பாண்டியனுக்கும் உடன் காலத்திணன் ஆவான் ,இவனது பெயரிலுள்ள குவாவன் இவனுடிய தந்தையை குறிப்பதாகவும் மாறன் என்னும் பெயர் இவனது பாட்டனை குறிப்பதாகவும் கொள்ளலாம் . 

இளங்கோயதி அரையன் மாறன் பரமேஸ்வரன் ;- குவாவன் மாறன் மைந்தனான மாறன் பரமேஸ்வரன் தன் தகப்பனுக்கு பிறகு மன்னன் ஆனான் .செந்தலை கல்வெட்டு இவ்வேந்தனை குவாவன் மாறனவன் மகன் இலங்கோயதிரைய னாயின் மாறன் பரமேசுரன் என்று குறிப்பிடுகின்றது .இரண்டாம் நந்திவர்மப் பல்லவனுடைய "பரமேசுவரன் " என்னும் விருது பெயரினை மேற்கொண்டான் என்பது புலனாகும் .முதரேய் மன்னர் களுக்குள் பெரும் புகழ் பெற்ற பெரும் பிடுகு முத்தரையன் சுவரன் மாறன் என்றவனை ஈன்றெடுத்த பெருமையும் புகழும் இம்ம்மன்னனை சார்ந்ததாகும் .

பெரும்பிடுகு முத்தரையன் சுவரன் மாறன் ;- இம்மன்னனைப் ப ற்றிய  செய்திகள் செந்தலை கல்வெட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளன .இவை அனைத்தும் பாவடிவிலேயே அமைந்துள்ளன .இவற்றுள் சில சிதைந்துள்ளன ."வீரத்தின்  உளைக்களனாக  ,வெற்றியின்  நிலைக்களனாக வாழ்ந்த இவ்வற்றால் மறவன் களம் பல கண்டு வெற்றி பல கொண்டு போரில் பெரும் பங்கு வகித்தான் " என  இராச  சேகர தங்கமணி கூறுவார் .

சுவரன் மாறனுடைய  செந்தலை கல்வெட்டில்  சுவரன் மாறன்  பாண்டியர்கள் மீதும்  சேரநாட்டு அரசன்  மீதும்  கீழ்கண்ட இடங்களில் வெற்றி பெற்றான்  எனகூறபட்டுள்ளது ,அவ்விடங்களாவன  கொடும்பாளூர் ,மணலூர் ,திங்களூர் ,காந்தளூர் ,அழுந்தியூர் ,காரை மரங்கூர்  ,அண்ணல்வாயல் ,செம்பொன்மாரி ,தஞ்சை ,செம்புல நாட்டு  வென்கோடல் ,புகலி ,கண்ணனூர் முதலியன ,இவ்விடங்களில் எல்லாம் தஞ்சை ,புதுகோட்டை ,திருச்சி ,ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்றும் உள்ளன .செந்தலை  கல்வெட்டு  சுவரன் மாறனால் ஆதரிக்கப் பெற்ற  கவிஞர்களால்  ஆக்கபெற்ற  மெய்கீர்த்திகள்   என்று கொண்டாலும்  அவைகள் முற்றிலும்  வரலாற்று  உண்மைகள்  .

சுவரன் மாறன் பல்லவ  மன்னன்  இரண்டாம் நந்தி வரமனுடைய படை தலைவனுடன்  சேர்ந்து மேற் கூரபெற்ற இடங்களில் வேடர்களை பெற்று பல்லவ பேரரசை  நிலை பெற செய்தான் எனக்கூறலாம் .

No comments:

Post a Comment