செந்தலைதூண் கல்வெட்டு ;- செந்தலை சுந்தரேஸ்வரர் கோயில் முன் மண்டபத்தில் காணப்பெறும் நான்கு தூண்களின் அடிப்பாகங்கள் சிதைந்து காணப்பெறுகின்றன ,அவைகள் சிதையாமல் இருந்திருந்தால் 27 வெண்பாக்கள் நமக்கு கிடைத்திருக்கும் ,இந்த நான்கு தூண்களில் காணப்பெறும் கல்வெட்டுக்கள் ,சுவரன் மாறன் நியமத்தில் பிடாரி கோயில் ஒன்று எடுபித்த செய்தியை தெரிவிக்கின்றன ,மற்றும் தான் வெற்றிகொண்ட ஊர்களின் பெயர்களையும் கல்லில் வெட்டும்படி ஆனையி ட்டுல்லான் .அதனை சுவரன் மாறானவன் எடுபித்த பிடாரி கோயில் அவனேரிந்த ஊர்களும் அவன் பேர்களும் அவனை பாடினர் பேர்களும் இதூங்கன் மேலேழுதின இவை " என அக்கல்வெட்டு கூறுகிறது இக்கல்வெட்டுகளில் சுவரன் மாறன் கீழ்கண்ட பட்டங்களை மேற்கொண்டுள்ளான் .
(1 ) சிரீசத்துரு மன்னன் (2 )சிறீ கள்வர் கள்வன் (3 ) சிறீ அதிகாசன் .மேலும் பத்து பட்ட பெயர்களையும் அக்கல்வேட்டுக்கள் குறிப்பிடுகின்றன .அவையாவன சிறீ மாறன் ,அபிமான தீரன் ,சத்துரு கேசரி ,தமராளன் ,செருமாரன் வேலு மாறன் ,சாத்தன் மாறன் ,தஞ்சை கோன்,வல்லக்கோன்,வான்மாரன் முதலியனவாகும் .சுவரன் மாறனை பற்றி மூன்று தமிழ் புலவர் பாடியுள்ளதாக அவனிடைய கல்வெட்டுகளிலிருந்து அறிகிறோம் .
1 ) திருச்சி மாவட்டத்தில் உள்ள பாசில் வேல் நம்பி
2 ) கோட்டாற்று இளம் பெருமானார்
3 ) கிழார்க் கூற்றத்துப் பவதாயமங்கல்த்து குவாவன் காஞ்சன்
மேற் கூறப்பெற்ற விருது பெயர்களையும் ,சுவரன் மாறனை பற்றிப் பாடிய புலவர்களையும் ஆதாரமாக கொண்டு இகுறுநில மன்னர் ஒரு பெரும் பேரரசனாகத் திகழ்ந்தான் என்று நடன காசிநாதன் கூறுகிறார் ."முத்தரைய அரசர்களுள் இவன் பெரும் பேரரசனகத் திகழந்தவன் என்று கூறலாம் ,பல்லவ மன்னர்களுள் முதலாம் நரசிம்மவர்மனுக்கும் ,சோழ மன்னர்களுள் முதலாம் ராசராசனுக்கும் பாண்டிய மன்னர்களுள் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கும் இவனை ஒப்பிடலாம் .தமிழ் புலவர்களை ஆதரித்து தனது வெற்றிகளை குறிக்கும் செய்திகளை வெண்பாக்களில் எழுதி பொரிக்க செய்த செய்கையால் வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த தமிழ் மன்னர்கள் அனைவரையும் இவன் விஞ்சி நிற்கிறான் ".

No comments:
Post a Comment