Sunday, April 8, 2012

திருசோற்றுத்துரைக் கோயிலில் உத்தமதானி  என்னும் விளக்கு எரிப்பதற்கு இத்தலைவன் பொன் தானமளித்த செய்தி கூறபெருகிறது இத்தலைவனுடைய ஆட்சி காலத்தில் அமைக்கப்பெற்ற கீரனூர் கோயில் உத்தமதானிசுவரம்   என்று அழைக்கப்படுகிறது ,திருச்சி மாவட்டம் மேலைபழுவூரில் உள்ள முதலாம் பராந்தக  சோழனுடைய   25ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு உத்தமதானிச் சத்ர்வேதி மங்கல்த்தினை குறிபிடுகிறது .மேல குறிக்கபெற்ற உத்தமதானி சதுர்வேதி மங்கலம் முதலான பெயர் இளங்கோ முத்தரையனின் பட்டபெயரான
உத்தமதானி என்பதுடன் தொடர்புடையதாகும் ,தென்னவன் இளங்கோவேள் என்னும் பெயர் கொடும்பாளுர்த் தலைவன் பூதவிக்ரம் கேசரியின் விருது பெயரை நமக்கு நினைவுட்டுகிறது.இத்தலைவன் கொடும்பாளூர் வேளிர் சாத்தன் மறவனுக்குப் பூதி அரிந்தகைக்கும் பிறந்தவனாக தெரிகிறது .கீரனூர் கீழ்தானியம் ஆகிய ஊர்களில் உத்தம தானிசுவரர் கோயில் இத்தலைவனால் அமைக்கப்பெற்றதாகும் .


அனந்தன் பழியிலி  ;- அனந்தன் பழியிலி என்பான் சாத்தன் பழிலியின் மகளான பழியிலி சிறிய நங்கைக்கும் மீனவன் தமிழ் திரையனான மல்லன் ஆனந்தனுக்கும் மகனவான் .


இதுகாறும் கூறியவற்றால் மரகுடியனராகிய முத்தரையர் பல்லவ பாண்டிய போராட்டத்தில் இருபக்கமும் நின்று போராடியும் தனித்தும் ஆட்சி புரிந்துள்ளனர் என்பது நிருபணமாகிறது .


முத்தரையர்கள் இன்று தமிழகம் ,ஆந்திரம் ,கருநாடகம் முதலிய மாநிலங்களில் முத்துராஜா ,முத்திரியர் ,அம்பலகாரகள் ,முத்திரிய நாயுடுகள் என்னும் பல பெயர்களில் வாழுந்து வருகின்றனர் .  

No comments:

Post a Comment