Saturday, January 28, 2012

saaaththan maaran-11

சாத்தனை அடுத்து அவனது மகன் சாத்தன் மாறன் என்பான் அரியணை ஏறினான் .இவனக்கு விடேல் விடுகு விழுபேரதிரையன் என்ற விருது பெயரும் உண்டு .கல்வெட்டு அறிஞர் கே.ஜி .கிருஷ்ணன் அவர்கள் இவ்வேந்தன் கி.பி .8  ஆம்   நூற்றாண்டின் இடையில் இரண்டாம் ராசசிம்ம பல்லவன் காலத்தில் வாழ்ந்தவன் ,இவ்வேந்தனை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு திருமையத்தில் உள்ள மெய் பெருமாள் கோயிலில் காணப்பெறுகிறது .
111 -மாறன் குவாவன்
-------------------------------
சாத்தன் மாறனை அடுத்து அவனது மகன்  மாறன் குவாவன் மணி முடி சூடி கொண்டான் .இவ்வேந்தனை பற்றி பொன்விளைந்தான் பட்டி இரண்டாம் நந்தி வர்மன் கல்வெட்டு ஒன்று  
  "ஸ்வஸ்தி ஸ்ரீ நந்திபன் மற்குயாண்டு 
............டுகு முத்தரையன் குவாவன் மனவாட்டிய்"
என்று குறிபிடுகிறது .
இவனது மனைவி சமண பள்ளிக்கு பொற்காசுகளை கொடையாக அளித்திருக்கிறாள் என்பது கல்வெட்டின் மூலம் தெரிகிறது  ,இம்மன்னனின் மகன் குவானின் மாறன் பற்றிய கல்வெட்டுகள் தஞ்சை மாவட்ட செந்தலையிலும்,மற்றொரு மகனாகிய குவாவன் சாத்தனின் கல்வெட்டு மலையடிபட்டியிலும் கிடைத்திருப்பதால் இவ்விரு பட்குதியிலும் ஒரு பெரும்பகுதி இம்மன்னன் ஆண்டிருக்கிறான் .    
    

Thursday, January 26, 2012

later mutharaiyar's.

பிற்கால முத்தரையர்கள் ;- தொண்டை மண்டலத்தை ஆண்ட முத்தரையரை 
----------------------------------   காட்டிலும் ,தஞ்சையை பகுதியை ஆண்ட பிற்கால முத்தரையர் தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளனர் .பிற்கால முத்தரையர் பற்றி தெரிந்து கொள்ள சான்றுகள் கிடைத்துள்ளதால் அவர்களது ஆட்சி பற்றியும் போர் நடவடிக்கைகள் பற்றியும் கலை இலக்கிய தொண்டு பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது .  
           முத்தரையர்கள் கி .பி எட்டாம் நூற்றாண்டின் இடையில்   இருந்து  கி .பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரையில் உள்ள ஒண்ணரை நூற்றாண்டுகள் முத்தரையர்கள் ஆட்சி செய்துள்ளனர் .
                            விடேல் விடுகு விழுப்பேரதி அரைசன் என்ற சாத்தன் மாறன் இம்மரபின் முதல் தலைவனாக தோன்றுகிறது இவனுடைய தாயின் பெயர் பெரும்பிடுகு பெருந்தேவி என்பாதாகும் சாத்தன் மாறன் என்ற பெயரின் முதற் பகுதி இவனுடைய தந்தை சாத்தன் என்ற பெயரை குறிக்கின்றதாக கொள்ளலாம் . 
                                   செந்தலை தூண் கல்வெட்டில் இம்மரபின் மூன்று அரசர்களின் பெயர்கள் காணபடுகின்றன .இவற்றுள் முதலாமவனாக பெரும்பிடுகு முத்த்ரையனான குவாவன் மாறன் குறிக்கபெருகின்றான்.குவாவன் என்பது இவனுடைய பாட்டன் பெயராகவும் கொள்ளலாம் .மாறன் பரமேஸ்வரன் அவனுடைய மகன் சுவரன் மாறனும் ஐந்தாவது ஆறாவது தலைமுறையை சேர்ந்தவர்களாக கொள்ளலாம் .
                              எழுத்தமைதியை கொண்டு கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பொரிக்கபெற்றதாக கருதப்படும் கல்வெட்டு ஒன்றை கொண்டு சாத்தன் என்பான் சுயேட்சையாக 
ஆட்சி புரிந்தவனாக கருதலாம் .(சான்று -பல்லவமன்னன் நந்தி வர்மன் மற்றும் நிருபதுங்க   வர்மனுடைய ஆட்சி கால கல்வெட்டுக்கள் ).   

Wednesday, January 11, 2012

சாத்தன் -
பிற்கால முத்தரைய மன்னருள் சாத்தன் என்பானே முதல் அரசன் என்று கருத பெறுகிறான் .பெரும்பிடுகு பெருந்தேவி  என்பார் இவனது தேவியார் ஆவார் .பெரும்பிடுகு என்னும் பல்லவ மன்னவர்களுடைய விருதிலிருந்து இவள் பல்லவ குல இளவரசி என்று கருதலாம் .முது வணிகத்தில் தனிப்புகழ் பெற்று விளங்கியமையால் இவ்வரசன் சாத்தன் என்று அழைக்கப்பெற்று இருக்ககூடம் .புதுகோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் விட்டுணு  குகை கோயில் பெரும்பிடுகு பெருந்தேவியின் காலத்தில் அமைக்கப்பட்டது .முத்தரையரது கோயில்களுள் இதுவே பழைமை மிக்கதாகும் . 

முத்தரையர் மரபு பட்டியல்
=======================
1    சாத்தன் ----(மனைவி  பெரும்பிடுகு பெருந்தேவி )


11  விடேல் விடுகு விழுப்பேராதி அரைசன்  (சாத்தன் மாறன் )


111  மாறன் குவாவன் 


1v   பெரும்பிடுகு முத்தரையன் --1         குவாவன் மாறன்--                                குவாவன் சாத்தன் 
                         1                                                                                                               1
v    இளங்கோ அதி அரையன்                         ------------------------------------------------------------------------------------------------ !                                                                     1 
      மாறன் பரமேஸ்வரன் 
                                                                                  1 -------------------------------------------------------------1 ----------------------------- 1                                 1
v1  பெரும்பிடுகு முத்தரையன் -11          விடேல் விடுகு இளங்கோ                  சாத்தன் காளி -சாத்தன்பழி  
                                                                      அதிரையன் காத்தான் பூதி                    ( பெண் )              










                                                        குவாவன்    சாத்தன்
1---------------------------------------------------------------------1 ----------------------------------------------------------1 


சாத்தன் பீதி                                        சாத்தன் காளி                        சாத்தன் பழியிலி 
விடேல் விடுகு இளங்கோ 
அதி அரையன்                                                                                                                                   மல்லன் 


                                                                                                              பழியிளியின் சிறிய நங்கை
                                                                                                                                          1
                                                                                                                                    கணவன்                        




அமரின்ரி முத்தரையன்      பூதி அரிந்திகை                                    மீனவன் தமிழிதி               மல்லன் விடுமன்                 
பூதி கலரி                                            விடேல் விடுகு                                   அரையன்                       மல்லன் விடுமன் 
                                                                                                                                                                         தென்னவன் தமிழிதி 
                                                                                                                                                                             அரையன்      
                                                           இளங்கோ வேலர் 
                                                               சாத்தன் மறவன் 
                                                                                                                                     அனந்தன் பழிலி                
பிற்கால முத்தரையர் (அல்லது) பெரு முத்தரையர்
-----------------------------------------------------------------------------------
தொண்டை  மண்டலத்தின் தென் பகுதியை ஆண்டு வந்த முத்தரையரை காட்டிலும் ,தஞ்சை பகுதியை ஆண்ட பிற்கால முத்தரையர் தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளனர் .பிற்கால முத்தரையரை பற்றி அறிந்து கொள்வதரக்குச் சில சான்றுகள் கிடைத்துள்ளாதால் அவர்களது ஆட்சி பற்றியும் போர் நடவடிக்கைகள் பற்றியும் கலை இலக்கியத்தொண்டு  பற்றியும்  தெரிந்துகொள்ள முடிகிறது .முற்கால முத்தரையரது ஆட்சியின் முடிவிற்கும் பிற்கால முத்தரையர் ஆட்சியின் தொடக்கத்திற்கும் இடையில் ஒரு கால இடைவெளி இருந்ததாக தெரிகிறது .


                   முத்தரையர்கள் பாண்டியர்களின் மீது வெற்றிகொண்டதின் நினைவாக மாறன் ,தென்னவன் ,என்னும் விருதுகளை பெற்றனர் .மேலும் 
விடேல் விடுகு ,மாற்பிடுகு,பெரும்பிடுகு  முதலான பட்டங்களை பற்று சிறப்புற்றனர்.
வாணகோ முத்தரைசர் ;-
=======================
  வாணகோ முத்தரைசர்  ,பொன்மாந்தநாரை அடுத்து மேற் கோவலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியுனை    ஆண்டு வந்ததாக தெரிகிறது .இவன் பொன்மாந்தநாரை வென்று கி .பி 737 -இல்  ஆட்சியை கைப்பற்றினான் என்பதனை "மேற் கோவலூர் மேல் வந்து தஞ்சிற்ற படிகளை எறிந்த ஞான்று ",என்னும் கல்வெட்டு தொடரால் அறியாலாம் .


                வாணகோ முத்தரைசன் முதலாம் நரசிமனின் காலத்திணன் ஆவான் .
                    மாந்த பருமர் ;வாணகோ முத்தரைசரை அடுத்து மாந்த பருமர் ஆட்சிக்கு வந்தார் .மாந்த பருமர் என்னும் பெயரை கொண்டு இவன் பொன் மாந்தனாரின் மகனாகவே இருத்தல் வேண்டும் மென்று தோன்றுகிறது .தனது தந்தையை கொன்று ஆட்சியை கைப்பற்றிய வாணகோ முத்தரைசரை வென்று பழியை தீர்த்துகொண்டான் ,இவன் புகழ் மிக்க மண்ணாக திகழ்ந்தான் .




சான்றுகள் ;-  
====================                              
 செங்கம் பகுதியில்   அமைந்துள்ள கடலாடியுளும்  
             
மேல்புன்செயலும், தருமபுரி மாவட்டம் கொளத்துரிலும் காணப்பெறும் நடுகல் 


கல்வெட்டுகள்  இம்மனன்னை பற்றி அறிந்துகொள்ள பயன் படுகின்றன .மேற்கூற்றை


கல்வெட்டுகள் ஆய்ந்து பார்க்கும்போது இவர் எந்த அரசனுக்கும் உட்படாது


தனித்தாண்ட பேரு வேந்தனாக தெரிகிறது .கொங்கணி அரசரும் கங்காமன்னரும் 







Tuesday, January 10, 2012

history of mutharaiyar

முத்தரையர் வரலாறு ;-
-------------------------------------------------------------------------------------


தற் காலத்திய திருச்சி ,தஞ்சை ,புதுகோட்டை  மாவட்டங்களில் பெரும் பகுதிகளை முத்தரையர்கள் ஆண்டு வந்தனர் .இவர்களது நாடு முத்தரையர் நாடு என்றே கல்வெட்டுக்களில் குறிக்கப்பெறுகின்றது .திருக்காட்டு பள்ளி அருகில் உள்ள செந்தலை அல்லது ஐம்பது கல் நகரம் இவர்களது தலை நகரமாகும் .இப்பொழுது ஐம்பது கல் நகரம் அம்பி நாரம் என்று அழைக்கப்படுகிறது .செந்தலைக்கு அருகில் உள்ள நாகத்தி ,உமையவள் ஆற்காடு ,வல்லம் ,தஞ்சை ,முதலிய பகுதிகள் முதராவ்யரின் தலை நகரத்தில் அடங்கி இருந்ததாக தெரிகிறது திருகாட்டு பள்ளி நியமம் ,விஷ்ணம்பேட்டை,இளங்காடு கூடநாணல்   கூழாக்கி  ஆற்காடு ,விண்ணமங்கலம் ,பொன்விளைந்தான் பட்டி ஆகிய பகுதிகளும் செந்தலையை சார்ந்திருந்தன .செந்தலைக்கு சந்திரலேகை சதுர்வேதி மங்கலம் என்னும் பெயரும் வழங்கியது ,தஞ்சை ,வல்லம் முத்தரையர்களது தலைமை நகரங்களாக சில காலம் இருந்தன .  


முற்கால முத்தரையர்;-
--------------------------------------


திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த தண்டரம்பட்டில் கிடைத்த இரண்டு நடுகல் கல்வெட்டுகள் பொன்மாந்தனார் என்ற முத்தரைய தலைவனை பற்றி கூறுகின்றன .தமிழ் நாட்டின் வட பகுதியில் உள்ள மேற் கொவலூரை தலை நகர்க கொண்டு இந்த பொன்மாந்தனார் ஆட்சி புரிந்துள்ளார் .இந்த பொன்மாந்தனார் ,முதலாம்   நரசிம்மவர்ம பல்லவனின் சம காலத்தவன் என்பதும் கல்வெட்டுகளால் புலனாகிறது .தொண்டை மண்டலத்திலுள்ள செங்கம் பகுதி இவனுடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்தது .இக்குறு நிலா மன்னன் தமது அண்ணன் மகனான வானகோ முத்தரையர் என்பவரால் போரில் தோற்கடிக்கப்பட்டதாக தெரிகிறது .பல்லவ முதலாம் நரசிம்ம வர்மனின் ஏழாம் ஆட்சியாண்டில் வானகோ முத்தரையர் ,பொன்மாந்தரையரை தாக்கியுளதால் இவனது ஆட்சியாண்டு கி .பி 637  இல் முடிவுற்றதாக கருதலாம் .இவனது ஆட்சி கி.பி.630 முதல் 637  முடிய நீடித்ததாக ஊகிக்கலாம் .